இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: காங்கிரஸ் கட்சி தீர்மானம்...!இந்தியப் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வர காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் மக்களவைத் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கான கடிதத்தை , மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் கையளித்துள்ளார்.

மக்களவையில் உள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (27) கலந்துகொள்ள வேண்டும் என அந்தக்கட்சி உத்தரவிட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

மத்திய அரசுக்கு எதிராக ஏற்கெனவே தெலுங்கு தேசம், YSR காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான கடிதத்தை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியும் தற்போது நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான கடிதத்தைக் கையளித்துள்ளது.

மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு 48 உறுப்பினர்கள் உள்ளதால், ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة