கே.பிக்கு சொந்தமான கப்பல் கடற்படையினரால் மேற்கு கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்டது...!எல்.ரி.ரி.ஈயினரால் பயன்படுத்தப்பட்ட,கே.பி.என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு சொந்தமான கப்பல் மேற்கு கடற்பரப்பில் இன்று கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்திற்கு பின்னர் A522 என்ற இந்தக் கப்பலை கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர்.

சேதமடைந்திருந்த இந்தக் கப்பலை இரும்பிற்காக விற்பனை செய்வதற்கு திட்டமிட்டிருந்தாலும் உரிய விலை மனு கிடைக்காததால் அதனை கடலில் மூழ்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல் மூழ்கடிக்கப்பட்ட இடத்தில் பவளப் பாறைகள் மற்றும் நீர் வாழ் உயிரினங்கள் அதிகம் காணப்படுவதால் அந்தப் பகுதியை சுற்றுலா பகுதியாக பேணிச் செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்த கப்பலுக்குக்கு மேலதிகமாக, பிரமுகர்கள் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட குண்டு துளைக்காத எட்டு கார்களும் இன்று கடலில் மூழ்கடிக்கப்பட்டன.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة