பேக்டீரியா தொற்றினை தவிர்க்க அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டியவை!

 
 
நோயெதிர்ப்பு சக்தி சற்று குறைவாக இருந்தால் உடனேயே நமக்கு பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படக்கூடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருமே இது போன்ற பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள். அதனை சற்று கவனிக்காமல் விட்டால் உடனேயே வைரஸ் காய்ச்சல் உட்பட அடுத்த கட்டத்திற்கு தள்ளிடும். ஒன்று உங்களது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் பாக்டீரியா தொற்று ஏற்பட்ட உடனேயே அதனை கவனித்து உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். பொதுவாக இது போன்ற பாக்டீரியாக்களை அழிக்க ஆண்ட்டிபயோட்டிக் மருந்துகளை கொடுப்பார்கள். மருந்துகளை எடுத்துக் கொள்வதை விட வீட்டிலிருந்தபடியே பாக்டீரியா தொற்றுகளை அழிக்க என்ன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும், அல்லது உங்கள் உணவில் எதை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பாருங்கள்.

2-1521873453

பாக்டீரியா : பாக்டீரியா என்பது மைக்ரோஸ்கோப்பினால் பார்க்க முடிந்த ஓர் உயிரினம் ஆகும். இது எல்லா இடங்களிலும் இருக்கும். இங்கு மட்டும் வசிக்கும் என்று குறிப்பிட்டு சொல்லும்படியாக இல்லாமல் எல்லாவிதமான சூழலிலும் தாக்கு பிடிக்கக்கூடியது. செடிகள், விலங்குகள்,மனிதர்கள் என எல்லாரிடத்திலும் இருக்கக்கூடியது. பொதுவாக பாக்டீரியா என்று சொன்னாலே தீங்கு விளைவிக்கக்கூடியது என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்கப்படுகிறது. உண்மையில் இயற்கைக்கு இந்த பாக்டீரியா பல வகைகளில் உதவி செய்கிறது, ஒரு செடி தன்னுடைய செடிகள் வளர்வதிலிருந்து நாம் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதற்கும் பாக்டீரியா தேவை.


3-1521873461

பாதுகாப்பு : பொதுவாக எல்லா பாக்டீரியாவுமே உங்களுக்கு தீங்கு விளைவிக்ககூடியது அல்ல, சில பாக்டீரியாக்கள் உங்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும். அதே போல பாக்டீரியா உடலின் இந்தந்த பாகங்களை மட்டும் தாக்கும் என்று சொல்ல முடியாது, உடலின் எந்த பாகங்களையும் இது தாக்கக்கூடும்.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة