யாழ். மாநகர மேயராக ஆனல்ட் தெரிவு...!யாழ். மாநகரசபையின் மேயராக தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் இம்மானுவேல் ஆனலட் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் யாழ் மாநகர சபையின் முதலாவது கூட்டம் இன்றைய தினம் இடம்பெற்றது.

இதன் போது மேயரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட இம்மானுவேல் ஆனல்ட் 18 வாக்குகளை பெற்று மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் போட்டியிட்ட வி.மணிவண்ணன் மற்றும் ஈ.பி.டி.பி சார்பில் முன்மொழியப்பட்ட றெமெடியஸ் ஆகியோர் தலா 13 வாக்குகளை பெற்றனர்.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة