இலங்கையில் இதுவரையில் 21616 ஹெக்டேயர் தெங்கு பயிர்ச்செய்கை அழிப்பு...!இலங்கையில் இதுவரையில் 21616 ஹெக்டேயர் தென்னை பயிர்ச்செய்கை அழிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தெங்கு உற்பத்தித்துறையை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை கமத்தொழில் சம்மேளனம் மற்றும் தெங்கு உற்பத்தித்துறையை பாதுகாக்கும் சங்கங்கங்களின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளன.

எதிர்க்காலத்தில் தெங்கு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும், இதனால் தெங்கு சார் உற்பத்தித்துறைகள் பெறும் வீழ்ச்சியை எதிர்நோக்கக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة