நெற்செய்கையாளர்களுக்கு 500 ரூபாவிற்கும் உரம் விநியோகம்...!நெற்செய்கையாளர்களுக்கு 500 ரூபாவிற்கும் மேலதிக பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 1500 ரூபாவிற்கும் உரம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இதற்குத் தேவையான நடவடிக்கைகள் விவசாய அபிவிருத்தி நிலையத்தினூடாக முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

இதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட நடைமுறைக்கு அமைய, உரத்தை விவசாயிகள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة