முல்லைத்தீவில் விவசாயம், கடற்றொழில் திட்டங்களுக்கு முதற்கட்டமாக 68 மில்லியன் ரூபா ஒதுக்கீடு...!முல்லைத்தீவு மாவட்டத்தில் 156 அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இந்தத் திட்டங்களின் முதற்கட்டத்திற்காக 68 மில்லியன் ரூபா கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

விவசாயம் மற்றும் கடற்றொழில் துறைகள் சார்ந்த திட்டங்களுக்கு இவை பயன்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

நான்கு கட்டங்களாக இந்தத் திட்டங்கள் அமுலாக்கப்படவுள்ளன.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة