செவ்வாயை ஆராயப்போகும் ரோபோ தேனீக்கள்...!அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

இந்த ரோபோ தேனீக்கள் இன்னும் 2 வருடங்களில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

செவ்வாய் கிரகத்திற்கு ‘ரோவர்’ கருவியை நாசா அனுப்பியுள்ளது. அக்கருவி ஆய்வுகளை மேற்கொண்டு முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. அது மிக மெதுவாக நகர்ந்து ஆய்வுகளை மேற்கொள்வதால் பூமிக்கு தகவல்கள் கிடைப்பதில் தாமதம் நிலவுகிறது.

மேலும், எரிபொருட்கள் அதிகம் தேவைப்படுவதுடன், அது அனுப்பும் தகவல்கள் சில நேரங்களில் சரியாக இருப்பதில்லை.
எனவே, இதைக் கைவிட்டுவிட்டு ‘ரோபோ’ தேனீக்களை அனுப்ப விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கு Mars Bees என பெயரிட்டுள்ளனர். இவை 3 முதல் 4 சென்டிமீட்டர் வரை தான் இருக்கும்.

இந்த தேனீ ரோபோவில் சிறிய கெமரா, சிறிய சென்சார் என்று நிறைய வசதிகள் இருக்கும். ஒவ்வொரு தேனியிலும் ஒவ்வொரு வசதியை ஏற்படுத்தி அங்கு பறக்க வைக்கலாம். 20-க்கும் மேற்பட்ட ‘ரோபோ’ தேனீக்கள் அனுப்பப்படவுள்ளன.

இவற்றில் சிறிது நேரம் தான் சார்ஜ் இருக்கும். இதனால் அங்கு இதனுடன் ஒரு ரோவர் அனுப்பப்பட உள்ளது. இதை வைத்து அனைத்து ரோபோக்களுக்கும் ‘சார்ஜ்’ செய்ய முடியும். எரிபொருள் செலவும் குறையும்.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة