ஆப்பிரிக்கா – இலங்கை இடையில் ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட நடவடிக்கை...!ஆப்பிரிக்காவுடனான சுற்றுலா மற்றும் கலாசார ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது தொடர்பில் இலங்கைக்கும் UNESCO-வுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியும் எத்தியோப்பியாவிற்கான தூதுவருமான சுமித் தசநாயக்க அண்மையில் UNESCO-வின் பணிப்பாளர் Yumiko Yokozeki யை சந்தித்தார்.

இதன்போது, ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இலங்கைக்குமிடையிலான சுற்றுலா மற்றும் கலாசார ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பான ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திடுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة