இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்திற்கு புதிய பணிப்பாளர் சபை நியமனம்...!இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்திற்கான (ICTA) புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த சபையின் தலைவராக பேராசிரியர் ரொஹான் சமரஜீவ நியமிக்கப்பட்டுள்ளார்.

தகவல் தொடர்பாடல், தொழில்நுட்ப கொள்கை வகுப்பு மற்றும் அபிவிருத்தி மூலோபாயங்கள் ஆகியவற்றை செயற்படுத்தும் நோக்கில், இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இந்த நிறுவனம் நிர்வகிக்கப்படுகின்றது.

இந்த நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ரொஹான் சமரஜீவ, ஈ – ஶ்ரீ லங்கா தேசிய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அபிவிருத்தி செயற்றிட்டத்தினைத் தயாரிப்பதில் அளப்பரிய பங்காற்றியவராவார்.

பேராசிரியர் ரொஹான் சமரஜீவ இதற்கு முன்னர் இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக செயற்பட்டார்.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة