லண்டன் நோக்கி பயணமானார் ஜனாதிபதி...!பொது நலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிரித்தானியாவுக்கு பயணமானார்.

இந்த மாநாடு நாளை முதல் எதிர்வரும் 20 ஆந் திகதி வரை லண்டனில் நடைபெறவுள்ளது.

பொதுவான எதிர்காலத்தை நோக்கி எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள ஜனாதிபதி, சர்வதேச நாடுகளின் தலைவர்கள் சிலரையும் சந்திக்கவுள்ளார்.

மேலும் பிரித்தானியாவில் வாழும் இலங்கை பிரஜைகளையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.

எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஜனாதிபதி பிரித்தானியாவில் தங்கியிருப்பார் எனவும் வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة