மத்திய மலைநாட்டில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்...!மத்திய மலைநாட்டில் இன்றும் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களத்தின் வானிலை அதிகாரி கணபதிப்பிள்ளை சூரியகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அதிகாரி குறிப்பிடுகின்றார்.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة