பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள ஐக்கிய இராச்சியத்திற்கு பயணிக்கிறார் ஜனாதிபதி...!பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (15) ஐக்கிய இராச்சியம் நோக்கி பயணமாகவுள்ளார்.

பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு எதிர்வரும் 16 ஆம் திகதியில் இருந்து 20 ஆம் திகதி வரை லணடன் நகரில் இடம்பெறவுள்ளதுடன் ‘பொதுவான எதிர்காலம்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை மாநாடு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 22 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருக்கவுள்ளதுடன் இதன்போது பல நாடுகளின் அரச தலைவர்களை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة