மட்டக்களப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் தீப்பற்றியமை தொடர்பில் விசாரணை...!மட்டக்களப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் தீப்பற்றியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு புணானை பகுதியில் நேற்றிரவு 9.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மண்ணம்பிட்டியிலிருந்து கல்முனையூடாக கொழும்பிற்கு செல்லும் பஸ்ஸொன்றே இவ்வாறு தீப்பற்றியுள்ளது.

எனினும் குறித்த பஸ், அனுமதி பத்திரமின்றி சேவையில் ஈடுபட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தீயினால் எவருக்கும் காயமேற்படவில்லை என்ற போதிலும், பஸ் முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.

பஸ் தீப்பற்றியமை குறித்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة