ஜனாதிபதிக்கும் பிரித்தானிய பிரதமருக்கும் இடையில் இன்று சந்திப்பு...!ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மேவுக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெறவுள்ளது

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், பல காரணிகள் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

இதேவேளை இன்று பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை பிரஜைகளையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.

லண்டனில் உள்ள இலங்கை பதில் உயர்ஸ்தானிகர் வழங்கும் விசேட வரவேற்பு நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளார்.

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன லண்டன் பௌத்த விகாரையில் நடைபெற்ற நிகழ்விலும் நேற்று கலந்து கொண்டார்.

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாட்டிற்கு இணையாக வர்த்தகம், மகளிர், இளையோர் மற்றும் மக்கள் சார்ந்த நான்கு மாநாடுகள் இடம்பெறவுள்ளன.

பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு இடம்பெறவுள்ள வர்த்தக மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.

இதன் போது நிலையான அபிவிருத்திகான இலக்கினை அடைவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

அதன் பின்னர் பொதுநலவாய விளையாட்டு மாநாட்டிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة