சிறு தேயிலைத்தோட்ட செய்கையை விரிவுபடுத்த தீர்மானம்...!இலங்கை தேயிலை உற்பத்தி வருமானத்தில் 76 வீத பங்களிப்பினை செலுத்தும் சிறு தேயிலை தோட்டச் செய்கையை மென்மேலும் விரிவுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 03 பிரதான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம், 1456 தேயிலை தோட்ட அபிவிருத்தி சங்கங்களுக்கு உரங்களை இடும் இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.

இதற்காக பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சினால் முன்வைக்கப்பட்ட பத்திரங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة