உலக அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த ஹேஷ்டெக்....!பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி சென்னை விமானநிலையம் வந்திறங்கிய போது விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பரங்கிமலைப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய வருகை பகுதியில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சென்னை விமான நிலையம் அருகே போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة