மலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம்; மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்...!நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் மின்னல் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேல், வடமேல், தென், மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة