சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நிவாரண விலையில் மீன் விற்பனை...!சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நுகர்வோருக்கு நிவாரண விலையில் மீன் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக கடற்றொழில் கூட்டுத்தாபனம் தெரிவித்தது.

இதன் பிரகாரம், கடந்த 2 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மீன்பிடி சங்கத்தின் கீழான விற்பனை நிலையங்களில் குறைந்த விலையில் மீனை விற்பனை செய்யவுள்ளதாக கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில், 5 மீன் வகைகளை நுகர்வோருக்கு குறைந்த விலையில் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة