காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னையில் திரையுலகினரின் போராட்டம் தொடங்கியது...!


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆளும் கட்சியான அ.தி.மு.க. சார்பில் கடந்த 3ந்தேதி உண்ணாவிரத போராட்டமும், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் கடந்த 5ந்தேதி முழு அடைப்பு போராட்டமும் நடந்தது.


தொடர்ந்து திருச்சி முக்கொம்புவில் இருந்து தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று காவிரி உரிமை மீட்பு பயணத்தினை தொடங்கினார். இன்று அவர் தஞ்சை சூரக்கோட்டையில் இருந்து 2வது நாள் பயணத்தினை தொடங்கியுள்ளார்.


இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடிகர்-நடிகைகள் இன்று சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே மவுன அறவழி போராட்டம் நடத்துகிறார்கள்.


இதற்கான திரையுலகினரின் மவுன போராட்டம் இன்று காலை தொடங்கியது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர்கள் விஜய், சிவகுமார் மற்றும் சிவகார்த்திகேயன், ராஜேஷ், சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.


இதேபோன்று தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், நடிகை ஸ்ரீப்ரியா மற்றும் நடிகர் கார்த்தி உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

சென்னை.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة