பொதுநலவாய விளையாட்டு: முதலாவது பதக்கத்தை வென்றது இலங்கை...!பொதுநலவாய அமைப்பின் 21 ஆவது விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது வெற்றியை பளுதூக்கல் போட்டியில் சத்துரங்க லக்மால் பதிவு செய்துள்ளார்.

பளுதூக்கல் போட்டியில் 56 கிலோகிராம் எடை பிரிவில் வெண்கலப் பதக்கத்தை அவர் வெற்றிக் கொண்டுள்ளார்.

248 கிலோ எடையை தூக்கி அவர் இந்தப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

இந்தப் போட்டியில் தங்கப் பதக்கத்தை மலேஷியாவும், வெள்ளிப்பதக்கத்தை இந்திய அணியும் சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة