அழிந்துபோன மம்மூத் யானைகளை குளோனிங் முறையில் மீண்டும் உருவாக்க முயற்சி...!ஆர்க்டிக் பிரதேசத்தில் வாழ்ந்த மம்முத் எனப்படும் சடை யானைகளை மீண்டும் உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

மம்மூத் எனப்படும் நீண்ட ரோமங்களுடனும், மிகப்பெரிய வளைந்த தந்தங்களுடனும் கம்பீரமான யானைகள் பனியுகக்காலத்தில் ஐரோப்பிய கண்டத்தில் வாழ்ந்தன.

30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அதிகமான அளவில் வாழ்ந்த இந்த வகை மம்மூத் யானைகள் மனிதர்களால் வேட்டையாடப்பட்டு கொன்றொழிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன சடை யானைகளின் ஏராளமான படிமங்கள் ஆர்க்டிக் பகுதியில் கிடைத்துள்ளதால், அதிலிருக்கும் DNA-க்களை எடுத்து குளோனிங் முறையில் மறு உருவாக்கம் செய்ய அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

தற்போது கிடைத்துள்ள படிமங்களில் 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சடை யானை குட்டியின் உறைந்து போன DNA-க்களை இதற்காக பயன்படுத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இம்முயற்சியில் வெற்றி ஏற்படுமானால் ஜூராஸிக் பார்க் திரைப்படம் போன்று காலத்தால் அழிந்த உயிரினங்கள் மீண்டும் நடமாடும் நிலை ஏற்படக்கூடும்.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة