ஐ.தே.க பொதுச்செயலாளர் பதவியிலிருந்து கபீர் ஹாசிம் இராஜினாமா...!ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தாம் இராஜினாமா செய்துள்ளதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

இராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கட்சி மறுசீரமைப்பு குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இடமளிக்கும் வகையில் இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகவும் அமைச்சர் கபீர் ஹாசிம் மேலும் தெரிவித்துள்ளார்.
 
© قراديو إذاعة تاميل الإسلامية علي مدار 24 ساعة